திமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத நிலையில் அமைச்சர்களாகிய நாங்கள் மாணவர்களை காப்பியடிக்க விட்டிருப்போம் என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என். நேரு பேசியதாவது:
நீட் தேர்வுக்கு விலக்கே பெற முடியலை எனில் நாங்கள் அமைச்சர்களாக இருந்தால் மாணவர்களை காப்பியடிக்கவாவது விடுவோம் இல்லையா? கண்டிப்பாக செய்வோம். நீங்க பீகார்ல காப்பியடிக்கிறீங்க... மத்திய பிரதேசத்தில் காப்பி அடிக்கிறீங்க... திறந்துவிட்டு எல்லாம் எழுதுறீங்க..அப்புறம் தமிழ்நாட்டில் நாங்க மட்டும் என்ன உத்தமசீலர்களா? எவ்வளவு நாளுக்கு இப்படியே இருப்பது? இவ்வாறு கே.என். நேரு பேசியுள்ளார்.
Former DMK Minister KN Nehru said that If the DMK in TN power they will allow to copy in NEET exams.