பால் வீதிக்கு வெளியே ஆதாரத்துடன் புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு- வீடியோ

Oneindia Tamil 2018-02-06

Views 7

சூரிய குடும்பத்தின் பால்வீதிக்கு வெளியே முதல்முறையாக புதிய கிரகங்களை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர் நமது பால்வீதியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக நமது சூரிய குடும்பத்தின் பால்வீதிக்கு வெளியே விண்வெளி மண்டலத்தில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

நாசாவில் உள்ள சந்தரா எஸ்ரே ஆய்வகத்தின் உதவியுடன் ஜின்யூ டாய், எடுவர்டு கெர்ராஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர். மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கிரகங்கள் 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

For the first time, scientists have discovered planets beyond the Milky Way. A team of Astrophysicists from the University of Oklahoma discovered the planets about 3.8 billion light years away

Share This Video


Download

  
Report form