'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யா ரசிகர்கள்!- வீடியோ

Filmibeat Tamil 2018-02-09

Views 682

சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாடலைப் போட ஓட்டுநர் மறுத்ததால் மாணவர்கள், பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் சூர்யா ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களான அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது பற்றி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Surya fans have broken the glasses of the private bus because driver didn't play 'Sodakku' song in bus. The driver and conductor are attacked by Virudhunagar Surya fans.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS