கலகலப்பு 2: சினிமா விமர்சனம்

Filmibeat Tamil 2018-02-09

Views 9.2K

காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள கலகலப்பு 2 இன்று வெளியாகிறது. உள்ளத்தை அள்ளித்தா, நாம் இருவர் நமக்கு இருவர் என்ற காமெடி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. இப்படங்களைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவான கலகலப்பு படத்தை வெளியிட்டார். தற்போது, அதே காமெடிக் கதையில், கலகலப்பு படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் இன்று வெளியாகிறது. இதில், ஜீவா, ஜெய், சிவா, மனோபாலா, ரோபோ சங்கர், சதீஷ், கேத்ரின் தெரெசா, நிக்கி கல்ராணி, சிங்கம் புலி உள்பட பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜீவா, ஜெய், சிவா, நிக்கி மற்றும் கேத்ரின் ஆகிய 5 பேருக்கு இடையில் நடக்கும் சம்பவம் தான் படம். இவர்களின் வாழ்க்கையில் பணம் என்னவெல்லாம் செய்கிறது, எப்படி விளையாடுகிறது என்பதை நகைச்சுவை பாணியில் இப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர், சி. இப்படத்தின் முதல் பாகத்தில் கொஞ்சம் கிளாமர் அதிகமாகவே இருந்தது. ஆனால், இப்படத்தில் அப்படியிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடியன் சதீஷ்க்கு இப்படத்தில் முதன் முதலாக ஜோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூகுளில் மேன்ஷன் பேரு டைப் செய்தால் வராது. ஆனால், பொலிட்டிசியன் என்று டைப் செய்தால், ஊழல்வாதிகளில் பெயர் அப்படியே வரிசையாக வரும் என்று படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS