ஈழத் தமிழர்களின் கழுத்தை அறுத்து கொல்வேன் என கொலை மிரட்டல் விடுத்த சிங்கள அதிகாரி பெர்னாண்டோவை கைது செய்ய வலியுறுத்தி லண்டனில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இலங்கை சுதந்திர தின விழாவை புறக்கணித்த ஈழத் தமிழர்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை தூதரகம் முன்பு இப்போராட்டத்தை அமைதிவழியில் ஈழத் தமிழர்கள் நடத்தினர். இதில் ஆத்திரமடைந்த இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் பெர்னாண்டோ, சைகை மூலமாக ஈழத் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என மூன்று முறை மிரட்டினார். இது தொடர்பான வீடியோ தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்தது.