விமானத்தை விபத்திலிருந்து காப்பாற்றிய பெண் விமானி-வீடியோ

Oneindia Tamil 2018-02-12

Views 1.6K

மும்பையில் வானில் பறந்து கொண்டிருந்த இரு விமானங்கள் ஒரே உயரத்தில் எதிரெதிர் திசையில் பயணம் செய்தபோது பெரும் விபத்து நடப்பதிலிருந்து ஏர் இந்தியா பெண் விமானி சாதுர்யமாக விமானத்தை இயக்கி 261 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். ஏர் இந்தியா விமானத்தை சேர்ந்த விமானம் மும்பையிலிருந்து போபாலுக்கும், விஸ்டாரா நிறுவனத்தின் விமானம் ஒன்று டெல்லியிலிருந்து புனேவுக்கும் கடந்த புதன்கிழமை (பிப்.7) சென்றன. இரு விமானங்களிலும் 261 பேர் பயணம் செய்தனர். பொதுவாக விமானங்கள் எதிர் எதிர் திசையில் பறப்பதை தவிர்க்க விமானங்கள் இந்த உயரத்தில் பறக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல்கள் வரும். விமானிகளும் அதற்கேற்ப தங்களது விமானம் பறக்கும் உயரத்தை மாற்றி அமைத்து கொள்வர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS