தமிழகத்தில் அடுத்தடுத்து இந்து கோயில்களில் ஏற்பட்டு வரும் தீவிபத்து எடப்பாடி ஆட்சி மீதான கோவத்தின் வெளிப்பாடகவே உள்ளது என்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.ஏழுமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் பூவை கந்தன் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் டிடிவி ஆதரவு மாவட்ட செயலாளரும் ,தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் தமிழகத்தில் அடுத்தடுத்து இந்து கோயில்களில் ஏற்பட்டு வரும் தீவிபத்து எடப்பாடி ஆட்சி மீதான கோவத்தின் வெளிப்பாடகவே உள்ளது என்றும் காவேரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்காதது எடப்பாடி தலைமையிலான அரசை ஒரு பொருட்டாக நிலைக்கவில்லை.தினகரன் தலையிலான ஆட்சி அமைந்தால் தான் இது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தீர்வுகாண முடியும் என தெரிவித்தார்.