ஒவ்வொரு காதலர் தினத்திலும் தங்களின் மற்றொரு பாதியாக்கிக்கொள்ள காதல் மொழி பேசுகிறார்கள் பலர். காதலர்கள் பேசுவதாலேயே எந்த மொழியும் தேனாகிறது. ஒவ்வொருவரும் தனித்துவமான மொழிப் பிரயத்தனங்களின் மூலம் காதல் பகிர்கிறார்கள். காதலித்தலில் காதல் சொல்லல் முக்கியப் பங்காற்றுகிறது என்றே கூறவேண்டும். ஏனெனில் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக இருக்கக்கூடியதல்லவா அது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் வந்த சிறந்த, மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்ட சில காதல் காட்சிகளின் வசனங்களை இங்கே பார்ப்போம். இதில் விடுபட்டுப்போன உங்களுக்கு விருப்பமான வசனங்களை கமென்ட்டில் பதிவிடலாம். நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசைப்படல, நீ அழகா இருக்கேனு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு..! எனக்கு உங்க பின்னாடி நடக்கணும்னு இஷ்டமே இல்ல, உன் கூடவே நடக்கணும். இந்த மாதிரியான உங்களுக்கு பிடித்த லவ் ப்ரொபோசல் டயலாக்குகளை கமென்ட்டில் குறிப்பிடலாம்.
Some best love proposal scenes and dialogues in Tamil cinema are here.