கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக அரைசதம் அடிக்க, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவை வென்றது. இந்திய ஆடவர் அணியைப் போலவே, மகளிர் கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
முதலில் நடந்த மூன்று ஒருதினப் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நேற்று துவங்கியது. போட்செவ்ட்ஸ்ரூமில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.
indian women cricket team beat south africa women cricket team in 1st t20