விசுவாசம் படத்தை அடுத்து அஜீத் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் நடித்தது போதும் தல என்று அஜீத் ரசிகர்கள் விவேகம் படத்தை பார்த்த உடனே கெஞ்சி கூத்தாடினார்கள். ஆனால் அஜீத்தோ மறுபடியும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டார். விவேகம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார் அஜீத். பிரபுதேவா அஜீத்தை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளாராம். விஜய்யை வைத்து ஒரு போக்கிரியை எடுத்தது போன்று அஜீத்தை வைத்தும் ஒரு ஹிட் கொடுக்க ஆசைப்படுகிறாராம்.
அடுத்த படம் பிரவுதேவாவுக்கு என்றால் அப்போ விஷ்ணுவர்தன்? யார் இயக்கினால் என்ன எங்களுக்கு தல சிவாவுடன் இருக்கக் கூடாது அவ்வளவு தான் என்கிறார்கள் ரசிகர்கள்.
Buzz is that Ajith might act in Prabhu Deva's direction after completing Viswasam with Siva. Prabhu Deva has met Ajith quit a few times recently.