கிளப்பில் குத்தாட்டம் போடும் ரைசா

Filmibeat Tamil 2018-02-16

Views 40

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ரைசா. இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியே வந்ததும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் பிரேம காதல்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில், ரைசா கிளப் ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் லீக் ஆகி பயங்கர வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் வைத்து ஒளிபரப்பியதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், தற்போது ரைசா குறைவான ஆடையில் ஒரு கிளப்பில் நடனம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ரைசா அவரது தோழியுடன் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரைசாவின் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

Raiza was impressed by the Biggboss show. She is currently acting with Harish Kalyan in 'Pyar Prema kaadhal'. In this case, Raiza danced video in a club with her friend is leaked in social media. Raiza's club dance video goes viral now.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS