கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு உண்மையிலேயே கர்நாடக விவசாயிகள் நன்றிக் கடன் பட்டுள்ளனர். சித்தராமையாவை இந்த விஷயத்தில் கர்நாடக விவசாயிகள் கோவில் கட்டிக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு அவர்களுக்காக பாடுபட்டுள்ளார் சித்தராமையா.
இன்று கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதற்கு சித்தராமையாவும் முக்கியக் காரணம். இந்த விஷயத்தில் அவர் மாநில முதல்வராக நடந்து கொள்ளவில்லை. மாறாக ஒரு விவசாயியாக மாறி விட்டார். விவசாயிகளின் உணர்வை உள்வாங்கி அத்தனை ஆர்வமாக இதில் அக்கறை காட்டினார்.
Each and every farmer in the Cauvery delta region in Karnataka will praise their CM Siddaramaiah for the SC verdict