நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்திய வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் பிரியங்கா விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
Since, January 2017, Priyanka chopra has served as ambassador to Nirav Modi's Diamond Jewellery, who was recently run by a bank scam. In this case, Priyanka Chopra has filed a case against Nirav Modi. This has created a stir in Bollywood.