மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது, அதை நான் கேட்கவே மாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெ.தீபாவின் தி.நகர் இல்லத்துக்கு வருமானவரித் துறை அதிகாரி என்று கூறிகொண்டு ஒருவர் வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸார் விசாரணை சிக்கினார். இப்போது நடந்த பிரச்சினை வருமான வரி துறை அதிகாரி போல் நடித்த நபரால்தான் பிரச்சினை. ராஜாவை ஒரே ஒரு முறைதான் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு மறுபடியும் சேர்த்துக் கொண்டேன். ஆனால் மற்றவர்கள் கூறுவது போல் நிறைய முறை அவரை நீக்குவதும் கட்சிக்குள் சேர்ப்பதுமாக இல்லை. அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவரை நீக்கி விட்டேன். பிறகு அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் நான் மீண்டும் சேர்த்து கொண்டேன்.
J.Deepa says that her husband Madhavan not in house for the past 4 days. I never asks his whereabouts.