சென்னை மடிப்பாக்கம் அருகே இளம்பெண் மீது ஆசிட் வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சில் காயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ராஜா என்பதாகும். இவர் மடிப்பாக்கத்தில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு பாலியல் தொல்லை கொடுப்பாராம்.