எய்ம்ஸ் விவகாரம் மத்திய அரசு மீது பாய்ந்த செயலாளர்- வீடியோ

Oneindia Tamil 2018-02-19

Views 117

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசு மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்துவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருநங்கைகள் மருத்துவம் படிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசிடம் அளித்து விட்டதாகவும் மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருவதுடன் தமிழக அரசு மீது வேண்டும் என்றே குற்றம் சுமர்த்தி வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Des : The health secretary said that the central government in the AIIMS hospital case should be charged on the Tamil Nadu government.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS