11 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்- வீடியோ

Oneindia Tamil 2018-02-22

Views 1

காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் காவிரி நடுவர் மன்றம் அளிக்க உத்தரவிட்ட தண்ணீரை காட்டிலும் 14.75 டிஎம்சி குறைவாகவே விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இன்று முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

CM Edappadi Palanisamy leads today the all party meeting in the issue of Cauvery water dispute. 43 organisations are called for this meeting.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS