அப்பாவி இளைஞரை துரத்தி துரத்தி தாக்கிய கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ மகனை பிரகாஷ் ராஜ் பாராட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது கர்நாடகாவில் தேர்தல் ஜுரம் அதிகம் ஆகிவிட்டது. பல தேசிய தலைவர்கள் அங்கே தேர்தலுக்காக களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு நாட்கள் முன்பு அங்கு மோடியும், அமித் ஷாவும் வந்தார்கள். தற்போது பிரகாஷ் ராஜ் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.