நம்பர் நடிகை பின்வாங்கும் சர்ச்சை

Filmibeat Tamil 2018-02-22

Views 2.3K

லேடி சூப்பர் ஸ்டார், நம்பர் ஒன் ஹீரோயின் என்று டாப் நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை லீட் ரோல்களில் நடிக்கத் தான் அதிகம் விருப்பம் காட்டுகிறார். ஆனால் அப்படி ஓகே சொல்லும் படங்களில் சில ட்ராப் ஆகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
த்ரில்லர் படங்களை எடுக்கும் ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நடிகை. கடந்த ஆண்டு ஒரு வாரிசு நடிகரை வைத்து துப்பறியும் த்ரில்லரை ஹிட் ஆக்கிய இயக்குநர் அவர். முதலில் ஓகே சொன்ன நயன் இப்போது நடிக்க மறுத்து விட்டாராம். இரண்டு படங்களை இயக்கியுள்ள இளம் இயக்குநர் ஒரு கன்னட படத்தை ரீமேக் செய்ய நடிகையுடன் பேசியிருந்தார். அதுவும் ட்ராப் ஆகிவிட்டதாம். அடுத்து சர்ச்சைக்குரிய குறும்படங்களை இயக்கிய இளம் இயக்குநருடன் இணைவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அதுவும் ட்ராப் ஆகவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
இந்த நடிகைக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? கதை பிடிக்காமல் நிறுத்துகிறாரா அல்லது திருமணத்துக்கு தயாராகிறாரா? என்பது தான் கோலிவுட்டில் ஹாட் டாக்!

Top heroine actress is continously dropping her committed films for unknown reasons.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS