விஜய் டிவி கையைவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி போய்விடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தமிழிலும் அறிமுகம் செய்து வைத்தார்கள். முதலில் நிகழ்ச்சிக்கும், அதை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல் ஹாஸனுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை துப்பித் துப்பி விமர்சனம் செய்தனர். பின்னர் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்களாகிவிட்டனர். கடந்த ஆண்டு கலர்ஸ் தமிழ் சேனல் இல்லை. ஆனால் இந்த மாதம் கலர்ஸ் தமிழ் சேனலை துவங்கிவிட்டனர். ஏற்கனவே ஆர்யாவை வைத்து அவருக்கு பெண் தேடும் நிகழ்ச்சியை துவங்கி ரசிகைகளின் வரவேற்பை கொத்தாக அள்ளிவிட்டனர். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொட்டிக் கொடுக்கிறது கலர்ஸ். கமல் அரசியலுக்கு சென்றுவிட்டதால் நிச்சயம் பெரிய நடிகரை பிடித்து நிகழ்ச்சியை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Buzz is that since Colors TV has got established its channel in Tamil, it will most probably telecast Bigg Boss show like in other languages.