ரஜினிகாந்த் அடுத்த படம் அறிவிப்பு!- அப்போ அரசியல் பயணம்?- வீடியோ

Filmibeat Tamil 2018-02-23

Views 2

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.ஓ' படத்தின் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்க சில இயக்குநர்களிடையே பலத்த போட்டி நிலவி வந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினியின் அடுத்த படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெற்றிருக்கிறார்.
'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'விஜய் 62' படத்தைத் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் சூப்பர்ஸ்டார் படத்தையும் தயாரிக்கவிருப்பதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ரஜினி நடித்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் சூழலிலும், அரசியல் என்ட்ரிக்கு மத்தியிலும் வந்த இந்த அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரஜினி ரசிகர்கள்.


Karthik subbaraj will be directed Superstar Rajinikanth's next film. This film will be produced by Kalanathi maran's Sun pictures.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS