ஜோதிகா அடுத்த பட டைட்டில், " உங்கள் ஜோ"- வீடியோ

Filmibeat Tamil 2018-02-24

Views 1

சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருப்பதைத் தொடர்ந்து மிகவும் தெளிவாக படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படம் விமர்சனங்களை தாண்டி ரசிகர்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது.
அடுத்து ஜோதிகா, 'தும்ஹாரி சுலு' இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு 'உங்கள் ஜோ' என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜோதிகா, வித்யா பாலன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தி படமான 'தும்ஹாரி' சுலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். ராதா மோகன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் இறுதியில் என்று கூறப்படுகிறது. சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் தும்ஹாரி சுலு தமிழில் ரீமேக்காகிறது. வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகிறார். இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். 'நாச்சியார்' படத்தைத் தொடர்ந்து 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துவரும் ஜோதிகா, அந்தப் படத்தை முடித்ததும் ஏப்ரல் இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். மேலும் ஜோதிகாவின் சம்பளமும் அடுத்தடுத்த படங்களில் உயர்ந்து வருகிறது.


Jyothika's last film 'Naachiyaar' was well received by fans over the reviews. Jyothika is playing the Tamil remake of 'Tumhari Sulu'. This movie is said to be titled 'Ungal Jo'.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS