துபாயில் உள்ள தடயவியல் துறை கட்டிடம் முன்பு ஸ்ரீதேவியின் ரசிகர்கள் கவலையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பிரேத பரிசோதனை முடிந்துள்ள நிலையில் அவரின் உடல் இன்று இரவு இந்தியா கொண்டு வரப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிந்தும் அவரின் உடலை தடயவியல் துறை இன்னும் ஒப்படைக்கவில்லை.
ஸ்ரீதேவியின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்துவிடும் ஆசையில் அவரின் ரசிகர்கள் தடயவியல் துறை கட்டிடம் முன்பு காலையில் இருந்து காத்துக் கிடக்கிறார்கள்.