சிரியா நாட்டு ராணுவம் கிளர்ச்சியாளர்களின் மீது தொடுத்திருக்கும் தாக்குதலில் அப்பாவிக் குழந்தைகள் பலரும் பலியாகி இருக்கிறார்கள்.
சிரியா நாட்டு அரசு மக்கள் மீது நடத்தும் ரசாயண குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தை உலக மக்கள் யாராலும் ஏற்க முடியவில்லை.
ரசாயண குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த சிறு குழந்தைகளின் புகைப்படங்கள் நெஞ்சை உருக்குகின்றன. இந்தச் சம்பவம் குறித்து பிரபலங்கள் என்று கூறியிருக்கும் கருத்துகளைப் பார்க்கலாம். எண்ணற்ற அப்பாவிக் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் சாவதைப் பார்க்கும்போது, நான் தனியாக இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் குற்றவுணர்ச்சியோடும், இயலாமையாலும் வருந்துகிறேன். #SaveSyria என ட்வீட் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.