ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து அவரது கணவர் போனி கபூர் ட்வீட்டியுள்ளார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவி சனிக்கிழமை மாலை துபாயில் உயிர் இழந்தார். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு மும்பை கொண்டு வரப்பட்டு நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து அவரது கணவர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, ஒரு தோழி, மனைவி, 2 மகள்களின் தாயை இழந்தது வார்த்தைகளால் சொல்ல முடியாது. எங்களுக்கு ஆதரவாக இருந்த என் குடும்பம், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், நலம் விரும்பிகள், ஸ்ரீதேவியின் எண்ணற்ற ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மகள்களை பாதுகாத்து, ஸ்ரீ இல்லாமல் வாழ வேண்டும் என்பதே என் தற்போதைய கவலை. அவர் தான் எங்களின் வாழ்க்கை, தெம்பு மற்றும் நாங்கள் சிரிக்க காரணம். அவர் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளோம். உன் ஆத்மா சாந்தியடையட்டும். நீ இல்லாமல் எங்கள் வாழ்வு பழையபடி இருக்காது என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Sridevi's husband Boney Kapoor tweeted from his wife account thanking friends, well wishers and her fans for their support. He said that the 'curtains never come down on an actor's life because they shine on the silver screen forever'.