கடைசியாக அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடினார். அதன்பின் கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங்கை தேர்வு குழுவினர் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் அணிக்கு தேர்வாக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஏப்ரல் மாதம் நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டி தொடரை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன். இது எனக்கு மிகவும் முக்கியமானது. 2019-ம் ஆண்டு வரை விளையாட விரும்புகிறேன். அதன் பிறகு ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்