ரஜினிக்கு போட்டியாக கமல்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-01

Views 1.9K

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் தான் இயக்கும் 'வீஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட சிஜி மற்றும் சவுண்ட் மிக்ஸிங் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் கமல். அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கும் நிலையில், 'விஸ்வரூபம் 2' படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் என ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார் கமல். ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் உரிமத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமே கைப்பற்றியது. திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டடன. ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி 'காலா' படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கமலின் இந்த டீசர் அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 'விஸ்வரூபம் 2' படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது 'விஸ்வரூபம் 2'. முதல் பாகத்தைப் போல சர்ச்சைகள் இல்லாமல் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Kamalhaasan's 'Vishwaroopam' trailer will be released soon. Kamalhaasan posted this announcement on his social media page.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS