சரணடைய வரச்சொல்லி இருவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக போலீசார் மீது என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை சிக்கந்தர்சாவடியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த சென்ற போலீசார் ரவுடிகளை சரண் அடையுமாறு கோரிக்கை விடுத்தனர்.