ஸ்விக்கி அல்லது ஜோமாடோ மூலம் உணவு ஆர்டர் செய்து தரும்படி கார்த்தி சிதம்பரம் சிபிஐயிடம் கோரிக்கைவிடுத்தார். ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கார்த்தி சிதம்பரத்திற்கு 5 நாள் காவல் நீடிப்பு செய்து நீதிபதி சுனில் ராணா உத்தரவிட்டார்.
அதேநேரம், தனக்கு வீட்டு சாப்பாடு வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. மருந்துகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி அளித்தார்.
An application for home cooked food sought by Karti Chidambaram was disallowed by the Special CBI court which heard his bail plea on Thursday. The court remanded Karti to CBI custody till March 5 in connection with the INX Media case.