பத்தாம் வகுப்பு மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் உறவினர்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்
காட்பாடியை சேர்ந்த சந்திரசேகர் சுஜாதா தம்பதியரின் மகன் திவ்யபிரசாத் இவர் காட்பாடியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான் இந்நிலையில் பொது தேர்வு நடக்க இருப்பதால் பள்ளி நிர்வாகம் சார்பில் சியோன் மலை ஆலயத்திற்கு சென்று ஜெபித்து விட்டு அங்கிருந்து பள்ளி பேருந்தில் பயணம் செய்யும் போது சக மாணவர்களிடம் திவ்யபிரசாத் பேசிகொண்டு வந்துள்ளார் அதற்கு ஆசிரியர் கோபி வாகனத்தில் பயணம் செய்யும் போது ஏன் பேசுகிறாய் என்று மாணவன் திவ்யபிரசாத்தின் தலை முடியை பிடித்து கீழே தள்ளி செருப்பு காலால் நெஞ்சின் மீதும் வலது மற்றும் இடது கை முதுகு தோல் பட்டை என பல இடங்களில் மிதித்துள்ளார் ஆசிரியரின் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான மாணவன் உடம்பில் அடி விழுந்த தழும்புகளும் பல இடங்களில் ரத்தம் கட்டியுள்ளது மற்றும் இடது கை முருக்கி தாக்கியதில் இடது கை மூட்டு எலும்பு வீங்கி போய் உள்ளது அது மட்டும் இன்றி மாணவனின் குரல்வலையை அறுத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் அதனை அடுத்து மாணவன் திவ்யபிரசாத் அவரது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார் இதையடுத்து மாணவன் திவ்யபிரசாத்தின் தந்தை மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆசிரியர் கோபியை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
The student's relatives protested demanding action against a private school teacher who committed murderous attack on a 10th grade student