கொள்கை என்ன என்று கேட்ட செய்தியாளரை, சின்னப் பையன் என்று வர்ணித்துள்ளார் ரஜினிகாந்த். சின்னப் பையன் கேட்டதுக்கு தலை சுற்றியவருக்கு, நாளை பெரிய பெரிய ஜாம்பவான்களின் கேள்விகள் என்னவெல்லாம் செய்யுமோ? சென்னையில் நேற்று நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியை ஒரு பைசா செலவில்லாமல் தனக்கான அரசியல் கூட்ட மேடையாகவே மாற்றி விட்டார் ரஜினி. எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தவர், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு தான் தான் என்று அறிவிக்காத குறையாக தனக்கும் எம்ஜிஆருக்குமான உறவை பொதுமக்கள் மத்தியில் கூறினார்.
Rajinikanth teased the reporter who raised question about the policies of his party in yesterday's speech, will he saying no one can question him?