2 உசுரு பலி, இது தான் தமிழக அரசின் மகளிர் தின பரிசு..!!

Oneindia Tamil 2018-03-08

Views 8

திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் அராஜகத்தால் கர்ப்பிணி பெண் பலியானது குறித்து அறிந்து மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்க்கிறார். அவர் மனைவி உஷா(36). திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் உஷா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் ஆனார். ராஜா தனது மனைவியுடன் பைக்கில் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சி நோக்கி வந்தார். ஹெல்மெட் அணியாததால் அவரது பைக்கை தனது ஜீப்பில் துரத்தினார் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ். பைக்கை வழிமறித்து அவர் எட்டி உதைத்தில் ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த வேன் மோதி உஷா பலியானார். இது குறித்து அறிந்த பொதுமக்கள் கோபம் அடைந்துள்ளனர்

Traffic police inspector Kamaraj is arrested after a pregnant lady died on the road because of his attitude. This incident happened in Trichy on wednesday evening.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS