விவசாயி அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. இவர் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். டெல்லியில் மாதக்கணக்கில் தமிழக விவசாயிகளுக்காக விதவிதமான போராட்டங்களை நடத்தியவர் அய்யாக்கண்ணு. டெல்லியில் இவர் நடத்திய போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் மரபணு மாற்ற விதைகளை தடை செய்யக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சிலர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
BJP woman leader slaped Farmer Ayyakkannu in the Thiruchendur Temple. Some farmers distributed leaflets at Tiruchendur Murugan temple headed by Ayyakannu to ban Genetic Change Seeds.