அர்ஜுன் ரெட்டியின் நோட்டா' ஷூட்டிங் ஆரம்பம்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-09

Views 1.2K

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க, ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு 'நோட்டா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் மூன்றாவது படமான இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' நாயகி மெஹ்ரீன் நடிக்கவுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் 'நோட்டா' படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. தலைப்பே இல்லாமல் ஆரம்பமான இப்படத்திற்கு, தற்போது 'நோட்டா' என பெயர் வைத்துள்ளனர். இன்று ஷூட்டிங் தொடங்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களை வாங்கியிருந்ததை கேலி செய்யாத அரசியல் கட்சிகளே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் படத்திற்கு 'நோட்டா' என டைட்டில் வைத்து பாஜகவினரை சீண்டியுள்ளனர்.

'Arjun reddy' hero Vijay Devarakonda acts in the film 'NOTA' directed by Anand sankar. 'NOTA' first look was released yesterday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS