விஜே அஞ்சனா தனது திருமண நாளையொட்டி உன்னை அடைந்தால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சன்மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளவர் அஞ்சனா. இவர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி திருமண நாள் கொண்டாடினர். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட அவர் கூறுகையில், மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை இரண்டாண்டுகளை கடந்துவிட்டன. மகிழ்ச்சி, சண்டை என நமக்குள் ஏகப்பட்ட அன்பு. மிக அழகான நீண்ட கால வாழ்க்கை நமக்கு இன்னும் இருக்கிறது. உன்னை அடைந்ததால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் போல உணர்கிறேன். உன்னை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
VJ Anjana tweet that Completing 2 beautiful years with this cutie filled with laughter, happiness, fights and soooo much love!!! Many many more years to come!! I know we have a long beautiful journey ahead!!!