வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்பவர்களும், சமூக விரோதிகள் சிலரும் அத்துமீறி முறைகேடாக நடந்து கொள்வதால் தீ விபத்துகளும், வன விலங்களுக்கு ஆபத்தும் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். வனத்தை சுற்றிப்பார்க்கவும், அருவிகளில் நீராடவும் செல்பவர்கள் வனத்தை சீரழித்து விட்டுதான் வருகின்றனர். பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிக்குள் போட்டு விட்டு வருவதோடு வன விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தான செயல்களை செய்கின்றனர். தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை உலகளவில் பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியத்துவம் கொண்ட் 25 இடங்களில் ஒன்றாகும். கன்னியாகுமரி, களக்காடு, முண்டந்துறை, கொடைக்கானல், நீலகிரி, ஆனைமலை, முதுமலை, முக்கூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய உயிரின வகைகளைக் கொண்டுள்ளன.