ஸ்மார்ட் போன் புரட்சி வந்தாலும் வந்தது புதுப்புது செயலிகள், அதிலும் குறிப்பாக இந்த செல்ஃபி மோகம் இருக்கே அனைவரையும் பாடாய்படுத்துகிறது. குரங்கணியில் மீட்புப் பணிக்காக வந்த ஹெலிகாப்டர் முன் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
புகைப்படங்கள் நம்முடைய நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டும் ஒரு உன்னதமான விஷயம். கேமராக்களின் புழக்கம் அதிகம் இல்லாத காலத்தில் புகைப்படங்களுக்கு இருந்த மதிப்பே தனி தான். கருப்பு, வெள்ளை புகைப்படங்களை இப்போது பார்த்தால் அதில் இருக்கும் உயிரோட்டம் இன்றைய கால புகைப்படங்களில் குறைவு தான்.