நடிகை ஸ்ரீதேவியின்- மாடல் மகள்கள்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-15

Views 2.4K

ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூருக்கு நடிகையாக விருப்பம் இல்லையாம்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தாய் வழியில் நடிகையாகிவிட்டார். அவர் தடக் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மகளின் முதல் படத்தை பார்க்காமல் ஸ்ரீதேவி சென்றுவிட்டார்.

ஜான்வி தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். நான் எப்படி அம்மாவை பார்த்து பார்த்து பெருமைப்பட்டேனோ அதே போன்று என் அம்மா என்னை பார்த்து பெருமைப்பட வைப்பேன் என்று ஜான்வி தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். முன்பு குண்டாக இருந்த அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகிவிட்டார். குஷிக்கு நடிப்பில் ஆர்வம் இல்லையாம். படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 4 வயதில் நடிக்கத் துவங்கியதால் தன்னால் படிக்க முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் ஸ்ரீதேவிக்கு இருந்தது. அதனால் தனது மகள்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sridevi's younger daughter Khushi Kapoor is not interested in acting like mom and sister Jhanvi. She wants to become a model after completing her studies.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS