சீனாவின் அதிபராக ஜி ஜிங்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்வு நடைமுறையில் அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்து மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தனர். சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஜி ஜிங்பிங் அதிபராக உள்ளார். சீனாவில் ஒரே நபர் தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்கக் கூடாது என சட்டம் இருந்தது.
இந்த நிலையில், அதிபர் பதவி என இருக்கும் கால அளவை ரத்து செய்யும்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கோரிக்கை வைத்ததையடுத்து, கட்சியின் உயர்மட்ட குழு கூடி அதை ஏற்று கொண்டது. இததொடர்ந்து, அதிபர் பதவிக்கு காலவரையரையை ரத்து செய்யும் முடிவுக்கு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்தது
Xi Jinping was re-elected as the Chinese President unanimously with all 2,970 votes in his favor at the National People’s Congress on Saturday.