தேனி மாவட்டம் கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு சதீஷ் நேற்று உயிரிழந்தார். தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம், குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ஆம்தேதி தீப்பிடித்தது. இந்த பயங்கர தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 10 பேர் காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டனர்.