பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். ஒரு பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நேரத்தில் கடைசி பந்தில் சூப்பராக சிக்ஸ் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் விஸ்வரூபம் எடுத்த போட்டியை பார்த்து திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். என்ன ஒரு கிளைமாக்ஸ் என்று பலரும் பாராட்டியுள்ளனர். வங்கதேசத்திற்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதை பார்த்த அமிதாப் பச்சன் அவர்களை பாராட்டி ட்வீட் போட்டார். அப்போது கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது என்றும் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்தார் என்றும் தெரிவித்திருந்தார். 2 ஓவர்களில் 34 ரன்கள் என்பதற்கு பதில் 24 ரன்கள் என்று தவறாக ட்வீட்டியதற்காக அமிதாப் பச்சன் தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். டிகே!!! என்ன ஒரு இன்னிங்ஸ்!!!!என்ன ஃபினிஷ்!!!!!!வாட் எ சேம்ப்!!!!தினேஷ் கார்த்திக் என்று அவரை பாராட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
Bollywood actor Amitabh Bachchan has apologised to cricketer Dinesh Karthik on social media for tweeting wrong numbers about the match in which Team India beat Bangladesh.