பெரியார் சிலை உடைப்பு ! நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை- வீடியோ

Oneindia Tamil 2018-03-20

Views 2.1K


பாஜக தேசிய தலைவர் எச் ராஜாவின் பேச்சால் ஆங்கங்கே பெரியார் சிலைகள் உடைக்கபட்டு பெரும் சர்ச்சை எழுந்தது இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள விடுதி கிராமத்தின் மையத்தில் பெரியார் படிப்பகம் ஒன்று உள்ளது அதன் முகப்பில் பெரியாரின் முழு உருவ சிலை உள்ளது . இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் பெரியாரின் சிலையை சேதப்படுத்தி பெரியாரின் தலையை உடைத்து சிலைக்கு கீழே வீசி சென்றுள்ளனர் இன்று அதிகாலை அந்த பகுதி மக்கள் இதனை கண்டு அதிர்ச்சியுற்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை தலையை மீண்டும் பெரியார் சிலையின் மீது வைத்து சிமெண்ட் கலவை கொண்டு ஒட்டவைத்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளுக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.

DES : The police are searching for the victims who broke Periyar statue at midnight

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS