திராவிடர் இயக்க வழக்கப்படி நடராஜன் உடல் இன்று நல்லடக்கம்

Oneindia Tamil 2018-03-21

Views 3

சசிகலாவின் கணவர் நடராஜன் உடலுக்கு அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்ததால், உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 16ஆம் தேதியன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.


M Natarajan's body today funeral ceremony after burial his native village Vilar in Tanjavur district.V K Sasikala was granted parole for 15 days today by the prison authorities here to attend the funeral of her husband M Natarajan who passed away earlier during the day.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS