சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை நினைத்து ஜெயலலிதா அதிக மன அழுத்தத்தில் இருந்தால் இதுவே அவரது உடல்நிலை பாதிக்க காரணமானது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா வாக்குமூலம் கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தீபா, தீபக், சசிகலா உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
Jayalalithaa's stress and health issues were mainly caused due to the conviction and imprisonment in the disproportionate assets case, her close aide Sasikala Natrajan has claimed.