ம. நடராஜன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அரசியலைத் தாண்டி ஒரு மொழிப் போராட்ட வாதிக்கு தமிழக முதல்வர் ஒரு இரங்கலை தெரிவித்திருக்கலாம்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 20ம் தேதி அதிகாலையில் காலமானார். சென்னை பெரும்பாக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Naam thamizhar party organiser Seeman slams TN CM and deputy CM for not send even condolence message too for passed away M.Natarajan, even M.K.Stalin too paid tribute to him.