கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
Cambridge Analytica illegally used 50 million people Facebook accounts. It did a major role in America election, and Brexit. This issue becomes a major one after Channel -4 sting operation video came out. We helped BJP to win Indian elections says Cambridge Analytica in their Indian branch profile.