ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாடு திமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அக்கட்சியை இந்த மண்டலத்தில் வலுப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய திமுகவின், 15 'கட்சி மாவட்டங்களை' கொண்ட மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் சரளை பகுதியில் இன்று காலை துவங்கியது. இந்த மாநாட்டிற்காக 41 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மாநாட்டு பந்தலும், 300 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துமிடம், தலைவர்கள் அமர்வதற்காக கருங்கல் மேடை சுமார் 2 ஆயிரத்து 700 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது
The regional conference held in Erode is great important to the DMK. This conference is being force and strengthen the party in this region.