ஈஷா யோகாவின் ரசிகைகளான தமிழ் நடிகைகள்!- வீடியோ

Filmibeat Tamil 2018-03-27

Views 1

சத்குரு ஜக்கி வாசுதேவ் தனக்கு ஸ்பெஷல் பரிசு அளித்துள்ளதை பார்த்து நடிகை காஜல் அகர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து நதிகளை இணைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் நதிகளை மீட்போம் என்ற பேரணியை நடத்தினார். இந்த பேரணி 16 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இதற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நதிகளை மீட்போம் பேரணியில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வாலுக்கு நன்றி தெரிவித்து பரிசு ஒன்றை அளித்துள்ளார் சத்குரு. இது குறித்து காஜல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, பரிசுக்கு நன்றி. இதை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்று தெரிவித்து அந்த பரிசை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

Sadhguru Jaggi Vasudev has sent a special gift to actress Kajal Agarwal. She tweeted that, 'Thank you so much SadhguruJV for this extremely thoughtful gift. It's very treasured.'

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS