தென் தமிழகத்தில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. குளிர் பிரதேசங்களை மக்கள் நாடத்தொடங்கிவிட்டனர். இயற்கை குளிர்பானங்களை குடித்து தாகத்தை தணித்து வருகின்றனர். மழைகாலம் என்றால் தினசரி வானிலை எச்சரிக்கை வெளியாகும். வெயில் காலத்தை முன்னிட்டு தமிழகம், புதுவையில் கோடைமழை எப்படி எங்கு, எப்போது பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளது. இதனால்தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Light rain or thundershower is likely to occur at isolated places over South Tamil Nadu. Dry weather is likely to prevail over North Tamil Nadu and Puducherry.