ரூ. 9 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் 3-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண மோசடி, வங்கிகளை ஏமாற்றியவர் என்று கழுத்தை நெறிக்கும் சிக்கல்களில் இருக்கிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகையை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார். வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Businessman Vijay Mallya, neck-deep in legal trouble over crores in unpaid dues and money-laundering charges, is set to marry her girl friend and former Air hostess Pinky lalwani for the third time.